News August 17, 2024
திருப்பூர்: 60 ஆண்டு கனவு இன்று நனவாகிறது!

திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்கிறார். இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
Similar News
News November 9, 2025
திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <
News November 9, 2025
திருப்பூரில் கைது! ஏன் தெரியுமா?

அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி, கணேசபுரம் வைஷ்ணவி கார்டனில், வெளிநாட்டினர் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் படி நேற்று முன்தினம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர். அதில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
News November 9, 2025
திருப்பூரில் இங்கெல்லாம் மின்தடை

உடுமலை இந்திரா நகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை நவ.10-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதூர். ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.


