News August 17, 2024
குருவின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்?

குருவுக்கு உகந்த நாளாகிய வியாழக்கிழமையில் நீராடி, விரதம் இருந்து பரிகாரம் செய்தால் குருவின் அருள் கிடைக்கும் என்கிறார்கள் முன்னோர்கள். குருவுக்கு மஞ்சள் நிற ஆடை ஏற்றது என்பதால், அந்த நிறத்தில் ஆடை அணிந்து முல்லை மலர்கள் கொண்டு குரு பகவானை அலங்கரிக்க வேண்டும் என்றும், கடலை பொடி சாதம், வேர்க்கடலை சுண்டல், இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம் எனவும் கூறுகிறார்கள்.
Similar News
News August 13, 2025
கூலி பட டிக்கெட் ₹100 வரை அதிகமாக வசூலிக்க அனுமதி

நேற்று முதலே ஆந்திரா & தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ‘கூலி’ பட டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகிவிட்டது. இந்நிலையில், இப்பட டிக்கெட்டை கூடுதலாக ₹100 வரை விற்பனை செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஆக.14 – 23 வரை ஒரு திரை கொண்ட தியேட்டர்களில் ₹75, மல்டிபிளக்ஸ்களில் ₹100 என கூடுதலாக வசூலிக்கலாம். அதேபோல் ‘WAR 2’ படத்திற்கு ₹500 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
அதிமுக கூட்டணியில் டிடிவி? இபிஎஸ் தடாலடி பதில்

மைத்ரேயன் அதிமுகவில் இருந்து வெளியேறியது உள்கட்சி விவகாரம்; அதை வெளியே சொல்ல முடியாது என்று இபிஎஸ் பதிலளித்துள்ளார். மேலும், ஒரே மேடையில் TTV, EPS இணைவார்கள் என நயினார் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, என்னிடம் ஏன் கேக்குறீங்க.. அதை அவரிடமே (நயினார்) கேளுங்க எனக் கூறிய அவர், யாரை சந்திப்பது என்று முடிவெடுக்க வேண்டியது நாங்கள்தான் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
News August 13, 2025
தீவிரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு & காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இருப்பினும், இந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ‘ஆபரேஷன் அகல்’-ன் ஒரு பகுதியாக உரி பகுதியை சுற்றி வளைத்து ராணுவம் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளது.