News August 16, 2024

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

image

பருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பெருமக்கள் தங்கள் ஊர் நுழைவாயில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் வழித்துணை மாதா கோவில் கட்டியுள்ளனர். அவற்றினை அகற்றுவதற்கு தங்கள் பகுதி ஊராட்சி மன்ற நிர்வாகம் முயற்சிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இன்று (ஆகஸ்ட் 16) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News October 18, 2025

விழுப்புரம்: மது பாட்டில் கடத்தியவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை கடத்தி வந்த விழுக்கம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 103 புதுச்சேரி மதுபானப் பாட்டில்கள் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News October 17, 2025

விழுப்புரம் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளன.

News October 17, 2025

விழுப்புரம்: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

image

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.57,700 – ரூ.1,82,400 வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய இந்த<> லிங்கில் <<>>சென்று இன்று-17 முதல் நவ-10, வரை விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!