News August 16, 2024

புதுக்கோட்டையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

image

புதுக்கோட்டையில் நாளை காலை 8 மணிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 மணி நேரம் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து படுகொலை செய்ததை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

Similar News

News October 26, 2025

புதுக்கோட்டை: தைலமரக்காட்டில் சடலமாக மீட்பு

image

அறந்தாங்கி அருகே சிட்டங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (48). எலக்ட்ரீசியன். இவர் நேற்று ஆலங்குடிக்கு கடலை ஏற்றி அரைப்பதற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளத்திவிடுதி கிராமத்தில் உள்ள தைல மரக்காட்டில் உள்ள மரத்தில் துண்டினால் தூக்கில் தொங்கிய நிலையில் வெங்கடாசலம் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 26, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை அழகு கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு 8-12ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.18-35 வயதும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 90 நாட்களாகும். பயிற்சியில் சேர்வதற்கு www.tnhdco.com இணையத்தில் பதிவுசெய்ய கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 26, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.25) இரவு 10 மணி முதல் இன்று (அக்.26) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!