News August 16, 2024
மேலும் 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்

நாட்டில் மேலும் 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் 3ஆம் கட்ட திட்டத்திற்கு ₹15,611 கோடி, தானே ஒருங்கிணைந்த ரிங் மெட்ரோ திட்டத்திற்கு ₹12,200 கோடி, புனே மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு ₹2,954.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோவின் 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News August 13, 2025
இந்தியா – சீனா விமான சேவை விரைவில் தொடக்கம்

இந்தியா – சீனா நேரடி விமான சேவையை தொடங்க ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா மற்றும் அதைத் தொடர்ந்து கல்வான் தாக்குதல் ஆகிய காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான விமான சேவை கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்பட்டு வருவதால், அடுத்த மாதம் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 13, 2025
மும்பை அணியின் கேப்டனாகும் CSK வீரர்

கடந்த IPL சீசனில் CSK-வின் இளஞ்சிங்கமாக களம் கண்ட ஆயுஷ் மாத்ரே, இந்தியா U19 அணியின் கேப்டனாக வழிநடத்தினார். இந்நிலையில், புச்சி பாபு கோப்பை (Buchi Babu Trophy) தொடரில், மும்பை அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிகள் ஆக.18 – செப்.9 வரை சென்னையில் நடைபெறவுள்ளன. சமீபத்தில் நடந்த கிளப் போட்டியில் 48 பந்துகளில் 82 ரன்களை விளாசியிருந்தார் ஆயுஷ்.
News August 13, 2025
ராஜினாமா செய்கிறார் மதுரை மேயர்

மதுரை மேயர் இந்திராணி (திமுக) ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹150 கோடி முறைகேடு விவகாரத்தில் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். தேர்தல் வரவுள்ள நிலையில், இவ்விவகாரம் அரசியல் ரீதியாக விவாதத்தை கிளப்பியது. ஸ்டாலின் உத்தரவின்பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், தற்போது இந்திராணியும் ராஜினாமா செய்யவுள்ளார்.