News August 16, 2024

காமெடி நடிகரின் மகனுக்கு ஓடி சென்று உதவிய VJS

image

காமெடி நடிகர் தெனாலியின் மகன் வின்னரசனுக்கு நடிகர் விஜய் சேதுபதி கல்லூரி கட்டணம் செலுத்தியுள்ளார். தெனாலியின் சூழ்நிலையை நடிகர் பாவா லட்சுமணன் VJS-க்கு தெரியப்படுத்திய நிலையில், உடனே சென்று உதவியுள்ளார். தனது சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, VJS செய்த உதவியை வாழ்நாளில் தானும், தனது மகனும் மறக்கவே முடியாது என தெனாலி உருக்கமாகக் கூறியுள்ளார்.

Similar News

News August 15, 2025

இவையும் இந்திய தேசத்தின் கொடிகள் தான்!

image

இன்று நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் இந்திய தேசிய மூவர்ணக் கொடிக்கு முன்பு, இந்திய நாட்டை அடையாளப்படுத்த பல கொடிகள் உபயோகப்படுத்தப்பட்டன. தற்போது உள்ள கொடி குறித்து அறிய <<17410370>>இங்கே <<>>கிளிக் செய்யவும். பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு 1880 முதல் 6 வகையான கொடிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் வண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், இலக்கு சுதந்திரமாகவே இருந்தது.

News August 15, 2025

தமிழகத்தின் குரல்: முதல்வர்களுக்கு கிட்டிய உரிமை

image

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட PM சுதந்திர தினத்தில் கொடியேற்றும்போது, அதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM ஏன் கொடியேற்றக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார் அன்றைய CM கருணாநிதி. தொடர்ந்து, அப்போதைய PM இந்திரா காந்திக்கு பலமுறை கடிதங்கள், நேரில் வலியுறுத்தல், சட்டப்பேரவையில் தீர்மானம் என அழுத்தம் கொடுத்தார். பின்பு, 1974-ல் முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமையை இந்திரா காந்தி வழங்கினார்.

News August 15, 2025

தலைமை மீது அப்செட்டில் MP தங்க தமிழ்செல்வன்!

image

திமுக தலைமை மீது MP தங்க தமிழ்செல்வன் அதிருப்தியில் இருக்கிறார். <<17279741>>அரசு விழா மேடையில் தன்னை அவமதித்த<<>> ஆண்டிபட்டி MLA மகாராஜனுக்கு எதிராக அவர் தலைமையிடம் முறையிட்டுள்ளார். ஆனால், MLA மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மா.செ.,வாக இருந்தும் தனக்கு மதிப்பில்லை என நிர்வாகிகள் சிலரிடம் புலம்பியுள்ளாராம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மோதல் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!