News August 16, 2024
பசுமை குடில் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த ஆண்டில் 17000 சதுர மீட்டர் பரப்பில் மானியத்தில் பசுமை குடில் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் குறைந்தது 500 ச.மீ முதல் 4000 ச.மீ வரை பசுமை குடில் அமைக்க விண்ணப்பிக்கலாம். மானியமாக ச.மீட்டருக்கு குறைந்த பட்சம் ரூ.422 அதிகபட்சம் ரூ.467.5 வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 9, 2025
தேனி அருகே ஓட்டுநரை தாக்கி ஆட்டோ திருட்டு

பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசக்திவேலன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். தேனி புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் உப்பார்பட்டி செல்லவேண்டும் என கூறவே. ஆட்டோவில் சென்று கொண்டி இருந்த போது இடையில் ஆட்டோ டிரைவர் சிவசக்திவேலனை தாக்கி 3பேரும் ஆட்டோவை கடத்தி சென்று விட்டனர். வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
News November 9, 2025
தேனியில் பரவும் குண்டு காய்ச்சல்

தேனி மாவட்டத்தில் தற்போது குளிர் காலம் தொடங்குவதால், சில பசுக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கால்நடை துறையினர் கூறுகையில், இந்த வகை காய்ச்சல் கொசு மற்றும் ஒரு வித பூச்சி கடியால் ஏற்படுகிறது. கால்களில் குழம்புகளில் முன்னும் பின்னும் குண்டு போன்று ஏற்படும். எனவே இதை குண்டு காய்ச்சல் என்றும் அழைக்கின்றனர். இது 3 நாட்களில் சரியாகி விடும் அச்சம் தேவையில்லை என தெரிவித்தனர்.
News November 9, 2025
தேனி: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

தேனி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <


