News August 16, 2024
முன்னாள் படைவீரர்களுக்கான குறை கேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 23ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்கான குறை கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 30, 2025
கள்ளக்குறிச்சி: தொழில் தொடங்க 50% மானியம் APPLY NOW

கள்ளக்குறிச்சி மக்களே நாட்டு கோழி பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசு 50% மானியம் மானியம் வழங்குகிறது. இதன் மூலம் பண்ணை அமைப்பதற்கான மொத்த செலவில் பாதி அரசு மானியமாக வழங்கப்படும். மேலும் 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகளையம் இலவசமாக இதில் பெறலாம். இதற்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் விண்ணப்பிக்கலாம். <<17560642>>விபரங்களுக்கு இங்கு<<>> கிளிக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
News August 30, 2025
தொழில் தொடங்க 50% மானியம் APPLY NOW

கோழி வளர்ப்புத் திட்டத்தில் மானியம் பெற, 625 சதுர அடி நிலம் வேண்டும். இந்த நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் நகல் மற்றும் மின் இணைப்பு அவசியம். குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பண்ணை தள்ளி இருக்க வேண்டும். பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். கோழிப் பண்ணை அமைத்து வருவாய் ஈட்ட நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க
News August 30, 2025
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் சஸ்பெண்ட்

சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனுார் கிராமத்தை சேர்ந்த சண்முகம், சின்னசேலம் அரசு உயர்நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் அதே பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. கள்ளக்குறிச்சி மகளிர் போலீசார் நேற்று முன்தினம் சண்முகம் மீது வழக்குபதிந்தனர். தலைமறைவான சண்முகத்தை ‘சஸ்பெண்ட்’ செய்து சி.இ.ஓ கார்த்திகா நேற்று உத்தரவிட்டார்.