News August 16, 2024
அரசுப் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு நிவாரணம்

மின்சார விபத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு, CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு இரங்கல் கூறிய CM, ₹3 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோவில்மட்டம் என்ற இடத்தில், அரசுப் பேருந்தின் மீது உயர் மின்னழுத்த கம்பி உரசிய விபத்தில் மின்சாரம் தாக்கி, ஓட்டுநர் பிரதாப் (42) உயிரிழந்தார்.
Similar News
News August 21, 2025
உணவை வீணடித்தால் ₹20 பைன்

உணவை வீணாக்குவதை தவிர்க்கும் வகையில், புனேயில் உள்ள ஒரு உணவகம் விதித்துள்ள கண்டிஷன் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் மெனுவை போட்டோ எடுத்து ஒருவர் பதிவிட, SM-லும் அது வைரலாகியுள்ளது. அந்த விலைப்பட்டியலின் இறுதியில் ‘உணவை வீணாக்கினால் ₹20 கட்டணம் விதிக்கப்படும்’ என எழுதப்பட்டுள்ளது. பலர் இதை பாராட்டினாலும், ‘வீணாக்கும் உணவுக்கும் சேர்த்து தானே காசு கொடுக்கிறோம்’ என்கின்றனர் சிலர். உங்க கருத்து?
News August 21, 2025
தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

*பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு கண்டனம். *நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். *மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம். *ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். *சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதற்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம். *TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
News August 21, 2025
எல்லா நேரத்துலயும் அது முடியாது.. மத்திய அரசு வாதம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு விதித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லா விவகாரங்களிலும் கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதிட்டது. இதனையடுத்து, மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடு இல்லையென்றால், வேறு ஏதாவது ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என SC தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?