News August 16, 2024
Press meetஇல் மன்னிப்பு கேட்பதில் சிக்கல்: Union Min.

தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய விவகாரத்தில், செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்பதில் சிக்கல் இருப்பதாக, மத்திய அமைச்சர் <<13798788>>ஷோபா<<>> கரந்தலஜே தெரிவித்துள்ளார். சர்ச்சை பேச்சு தொடர்பாக ஏற்கெனவே X தளத்தில் மன்னிப்பு கோரியதாக, அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் காரணம் என அவர் பேசியிருந்தது சர்ச்சையானது.
Similar News
News August 15, 2025
தமிழகத்தின் குரல்: முதல்வர்களுக்கு கிட்டிய உரிமை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட PM சுதந்திர தினத்தில் கொடியேற்றும்போது, அதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM ஏன் கொடியேற்றக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார் அன்றைய CM கருணாநிதி. தொடர்ந்து, அப்போதைய PM இந்திரா காந்திக்கு பலமுறை கடிதங்கள், நேரில் வலியுறுத்தல், சட்டப்பேரவையில் தீர்மானம் என அழுத்தம் கொடுத்தார். பின்பு, 1974-ல் முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமையை இந்திரா காந்தி வழங்கினார்.
News August 15, 2025
தலைமை மீது அப்செட்டில் MP தங்க தமிழ்செல்வன்!

திமுக தலைமை மீது MP தங்க தமிழ்செல்வன் அதிருப்தியில் இருக்கிறார். <<17279741>>அரசு விழா மேடையில் தன்னை அவமதித்த<<>> ஆண்டிபட்டி MLA மகாராஜனுக்கு எதிராக அவர் தலைமையிடம் முறையிட்டுள்ளார். ஆனால், MLA மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மா.செ.,வாக இருந்தும் தனக்கு மதிப்பில்லை என நிர்வாகிகள் சிலரிடம் புலம்பியுள்ளாராம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மோதல் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News August 15, 2025
ஏன் ரோஹித் வெற்றிகரமான கேப்டன்?

கிரிக்கெட்டில் ரோஹித்தின் கேப்டன்சிக்கு தனித்தன்மை உண்டு. இந்நிலையில், ஏன் ரோஹித் சர்மா ஒரு வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கிறார் என்று புவனேஷ்வர் குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ரோஹித் ஒரு முதிர்ச்சியான கேப்டன் என்றார். ஒவ்வொரு வீரர்களின் பலத்தையும் புரிந்துகொண்டு, அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவருக்கு நன்றாகத் தெரியும் எனக் குறிப்பிட்டார். ரோஹித் கேப்டன்சியில் மறக்க முடியாத மொமண்ட் எது?