News August 16, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Similar News

News September 17, 2025

விழுப்புரம்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

image

விழுப்புரம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

News September 17, 2025

இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய எம்ஆர்கே

image

விழுப்புரத்தில் உள்ள ஏ.கோவிந்தசாமி மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு, தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, இரா.லட்சுமணன், செஞ்சி மஸ்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

விழுப்புரத்தில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழியினை அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று (17.09.2025) ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு திரு.ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!