News August 16, 2024
புதுடெல்லியில் புதுவை சுதந்திர தினம்

புதுவை சுதந்திர தின கொண்டாட்டத்தை இன்று புது டெல்லியில் உள்ள புதுவை சுற்றுலா விருந்தினர் மாளிகையில் புதுவை சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுவை பாரதியார் பல்கலைக்கழகம் மாணவர்களின் கலை நிகழ்ச்சி, கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றன. நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 16, 2025
தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்

புதுச்சேரி, திலாசுபேட்டை தொகுதியில் தீபாவளி பரிசு தொகுப்பாக ரூ.585 மதிப்புள்ள 2-கிலோ சர்க்கரை, 2-கிலோ சூரியகாந்தி எண்ணெய், 1-கிலோ கடலைப்பருப்பு, ரவை, மைதா அரைக்கிலோ என தீபாவளி தொகுப்பை பொதுமக்களுக்கு மாநில முதல்வர் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
News October 16, 2025
புதுச்சேரி: EXAM இல்லை..வேலை ரெடி!

புதுவை மக்களே, இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 16, 2025
புதுச்சேரி: மனைவி கண்டித்ததால் தற்கொலை

தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் மனோகர் (48), மனைவி கிருஷ்ணகுமாரி இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மனோகருக்கு மதுபழக்கம் இருந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் மனோகர் குடித்து விட்டு வந்ததை மனைவி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.