News August 16, 2024

கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

வடபாதிமங்கலம் அருகே கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையற்றார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜெகதீசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

Similar News

News January 1, 2026

திருவாரூர்: இலவச பட்டா வழங்கல்

image

முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட உதய மார்த்தாண்டபுரம் அரசுப் பள்ளியில், தெற்கு பள்ளி மேட்டுப் பகுதியைச் சேர்ந்த 42 பயனாளிகளுக்கு வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இலவச குடிமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினர்.

News January 1, 2026

திருவாரூர்: ரயில் மோதி சிதைந்த உடல்

image

முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் மீனவர் வீரமுத்து (55) என்பவர் நள்ளிரவு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல, அப்பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற ரயில் மோதி உடல் சிதைந்து உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற திருவாரூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

திருவாரூர் மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

திருவாரூர் மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம், கடந்த 2025-ஆம் ஆண்டில் திருவாரூரில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். SHARE செய்யவும்!

error: Content is protected !!