News August 16, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” எனும் Beti Bachao Beti Padhao (BBBP) திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் போட்டியில் பள்ளி,கல்லூரி மாணவிகள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள ஆட்சியர இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

மயிலாடுதுறை: போதையில் ரகளை; அதிரடி கைது

image

பொறையாறு அருகே அரசலங்குடி கிராமம் வழியாக நேற்று முன்தினம் மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேனை வழிமறித்த போதை இளைஞர்கள் சிலர் வேன் கண்ணாடியை கல் வீசி உடைத்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, வேன் கண்ணாடியை உடைத்த தாமரைச்செல்வன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஆகாஷ், கபிலன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News November 9, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 8, 2025

மயிலாடுதுறை: பாஜக சார்பில் பயிலரங்கம்

image

மயிலாடுதுறை பாஜக சார்பில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கான BLA 2 பயிலரங்கம், இன்று (08.11.2025) மயிலாடுதுறை நாராயணி திருமண மண்டபத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தங்க வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!