News August 16, 2024

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் 

image

ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், பெரியவலக, பாப்பாத்திகாடு, நாராயணவலசு , கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, மாணிக்கம்பாளையம், சத்தி சாலை, நேதாஜி சாலை, இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி பகுதிகளில் நாளை(17.8.24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளனர்.

Similar News

News August 17, 2025

ஈரோடு: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி அதிகாரி வேலை!

image

அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வங்கி அதிகாரியாக பணியாற்ற சூப்பர் வாய்ப்பு உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 17, 2025

ஈரோடு: 8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை!

image

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற குடற்புழு நீக்க முகாமில் மொத்தமாக 8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க தின முகாமில் 2080 அங்கன்வாடி மையங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,10,886 குழந்தைகளுக்கும், பள்ளி, கல்வி நிறுவனங்கள் மூலம் 5,28,766 மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

News August 17, 2025

ஈரோடு: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தால் வேலை!

image

ஈரோடு: பவானிசாகர் மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், நீச்சல் மற்றும் மீன்பிடி வலை தொடர்பான திறன்கள் அவசியம். மேலும் விவரங்களுக்கு,பவானியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது 04295-299261 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!