News August 16, 2024
சென்னையில் பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை ஆலோசனை

சென்னையில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரவிருக்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதில், துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி உள்ளிட்ட 7 துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
Similar News
News October 17, 2025
சாதித்து காட்டிய சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 28 வயது கூலித் தொழிலாளி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த செப்.26-ல் பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, விபத்தில் சிக்கி அவருக்கு கை சிதைந்தது. இந்த நிலையில், இழந்த ஒரு கையை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் மீட்டுக்கொடுத்துள்ளனர். இந்த சிகிச்சை இந்தியாவிலேயே இங்குதான் முதல் முறை நடைபெறுகிறது.
News October 17, 2025
சென்னை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, சென்னை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மழை காலங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், வெளிப்புற மின் கேபிள்களை தொட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவசர உதவிக்கு 100 மற்றும் Kaaval Uthavi செயலியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி இதை உடனே தெரியப்படுத்துங்க.
News October 17, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில்இன்று (16.10.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.