News August 16, 2024
மாநில இளைஞர் விருது: கலெக்டர் பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சரால் 78வது சுதந்திர தினத்தன்று சமூக நல தன்னார்வலர் விருது கவின் பாரதிக்கு வழங்கப்பட்டது. இதில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, இன்று நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Similar News
News August 22, 2025
புதுகை: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <
News August 22, 2025
அண்ணா சிலை கூண்டு மீது படுத்து உறங்கிய மது பிரியர்

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த அண்ணா சிலையை சுற்றி கூண்டு அமைக்கப்பட்டு பாதுகாப்பாவுடன் உள்ள நிலையில் மது போதையில் ஏறி இளைஞர் ஒருவர் கூண்டின் மேல் பகுதியில் படுத்து உறங்க ஆரம்பித்தார். இதனை கவனித்த பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனே அந்த வாலிபரை இறங்கச் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 22, 2025
புதுக்கோட்டை: ரூ.48,000 சம்பளத்தில் அரசு வங்கியில் வேலை

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <