News August 16, 2024
‘ராயன்’ OTT ரிலீஸ் அறிவிப்பு

நடிகர் தனுஷின் 50ஆவது படமான ‘ராயன்’ வருகிற 23ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கி நடித்த இத்திரைப்படம் கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 4 சகோதரர்களின் வாழ்க்கையில் நடப்பதை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படம் திரையரங்குகளில் ₹150 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
Similar News
News August 15, 2025
குறைபாடு திறமையில் இல்லை.. சாதனை மங்கை துளசிமதி

இடதுகையின் பிறவிக் குறைபாட்டால் கட்டை விரலை இழந்தார் அந்தப் பெண். எதிர்பாரா விபத்தால் இடதுகை இயக்கமே கட்டுக்குள் வந்த நிலையிலும், பக்கபலமாக நின்றார் அவரது தந்தை. தனது விடாமுயற்சியால் ஆசிய பாரா போட்டிகளில் பேட்மிண்டனில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் வென்று திறமையை நிரூபித்தார். இப்படிப்பட்ட சாதனை மங்கையான துளசிமதி முருகேசனுக்கு TN அரசு ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.
News August 15, 2025
இளையராஜா – வைரமுத்து பிரிவுக்கு இதுதான் காரணம்

தனக்கும், தனது அண்ணன் இளையராஜாவுக்கும் ஏற்பட்ட சண்டையால் 10 ஆண்டுகள் பேசாமல் இருந்ததாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பட நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இந்த காலகட்டத்தில் நுழைந்த வைரமுத்து, இளையராஜா வளர்ந்து வருவதற்கு, தானே காரணம் என பல மேடைகளில் கூறியதாக தெரிவித்தார். இதனை முதலில் நம்பாத ராஜா, பின்னர் ஆதாரப்பூர்வமாக அறிந்ததால் வைரமுத்து – இளையராஜா இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறினார்.
News August 15, 2025
பாரபட்சம் காட்டும் மத்திய அரசு: ஸ்டாலின் தாக்கு

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்வதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வளர்ச்சியை விட TN அரசின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வில் மாநிலங்களின் பங்கு குறைந்து வருவதாகவும், மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்தின் நிதியை கூட போராடி வாங்க வேண்டியுள்ளதாகவும் சாடியுள்ளார்.