News August 16, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி கொத்தவாச்சேரியில் 34 மிமீ மழையும், புவனகிரியில் 28 மி.மீ, பண்ருட்டியில் 24.6 மிமீ, அண்ணாமலை நகர் 22 மி.மீ, குறிஞ்சிப்பாடி மற்றும் விருத்தாசலத்தில் 15 மிமீ, சிதம்பரத்தில் 14.3 மிமீ, கடலூரில் 4.1 மிமீ மழை பதிவாகி உள்ளது.

Similar News

News November 11, 2025

கடலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

News November 11, 2025

கடலூர்: வயிற்று வலியால் விபரீத முடிவு

image

திட்டக்குடி அடுத்த கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (45). டிரைவரான இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் கொட்டாரம் அருகே உள்ள ரைஸ் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 11, 2025

கடலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

கடலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!