News August 16, 2024

கடலூரில் புதிய போக்குவரத்து சேவை

image

கடலூர் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கான புதிய பேருந்து போக்குவரத்து சேவையினை மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி ஆணையர் S. அனு IAS மற்றும் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உடன் போக்குவரத்து துறை அலுவலர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 1, 2025

கடலூர் மாவட்டத்தில் 245.6 மி.மீ மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 01) காலை 8.30 மணி நிலவரப்படி, அண்ணாமலை நகரில் 36 மில்லி மீட்டர் மழை, சிதம்பரம் 26 மி.மீ மழை, பரங்கிப்பேட்டை 25.4 மி.மீ மழை, சேத்தியாத்தோப்பு 19.2 மி.மீ மழை, புவனகிரி 19 மில்லி மீட்டர் மழை என மாவட்டம் முழுவதும் 245.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

News December 1, 2025

கடலூர்: மயங்கி விழுந்த சிறுவன் திடீர் சாவு

image

விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (50). இவரது மகன் கிஷோர் (16) பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர்களது புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வீட்டில் இருந்த கிஷோர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2025

கடலூர்: 500 போலீசார் அனுப்பி வைப்பு

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீப விழா நடைபெற உள்ளது. இதில் டிசம்பர் 3-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயுதப்படை, போக்குவரத்து, குற்றப்பிரிவு போலீசார் என 500 பேரை திருவண்ணாமலைக்கு எஸ்.பி ஜெயக்குமார் அனுப்பி வைத்துள்ளார்.

error: Content is protected !!