News August 16, 2024
‘அவதார்’ நாயகன் அவதரித்த தினம்

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு இன்று பிறந்தநாள். ‘பிரானா 2’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அடுத்து இயக்கிய ‘டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றன. இவர் அறிவியல் புனைவு படங்களை எடுப்பதில் வல்லவர். இருப்பினும் இயற்கை மீதான அவரது காதல் ‘அவதார்’ படங்களில் வெளிப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே அவரது ஹீரா கதாபாத்திரம் நின்றது.
Similar News
News August 18, 2025
11 விநாயகர் சபை இருக்கும் அதிசய கோயில்!

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் வாசீஸ்வரர் திருத்தலத்தில் ‘11 விநாயகர் சபை’ உள்ளது. புராணங்களின்படி, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டதால், வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்தது. விநாயகர் சபை அமைத்தும் விசாரணை மேற்கொண்டாராம். அதனடிப்படையில்தான், இங்கு 11 விநாயகர் சபை உள்ளது. இக்கோயிலில் வந்து வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
News August 18, 2025
மிஸ்ஸான ஹாலிவுட் வாய்ப்பு: ஃபஹத் சொன்ன காரணம்

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் இயக்குநர் Alejandro González Iñárritu-வின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து ஃபஹத் பாசில் பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், தான் வீடியோ காலில் ஆடிஷன் செய்தபோதே அவருக்குப் பிடிக்கவில்லை என்றார். இதற்கு தனது ஆங்கில உச்சரிப்பே காரணம் என்ற அவர், சம்பளமே இல்லாமல் 4 மாதங்கள் USA-ல் இருக்கச் சொன்னதால், அப்படத்தை கைவிட முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
அதிமுக கூட்டணியில் தமமுக இணைந்தது.. ஜான்பாண்டியன்

பாஜக – அதிமுக (NDA) கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என முன்னர் கூறிவந்தார். சமீபத்தில் நெல்லைக்கு சென்ற EPS உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், NDA கூட்டணியில் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.