News August 16, 2024
மத்திய அரசை கண்டித்து, நன்றி தெரிவித்து திமுக தீர்மானம்

சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாதது உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக நாணயம் வெளியிடுவதற்கு நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News December 28, 2025
தமிழின் பெருமை, இந்தியாவின் ஒற்றுமை: PM மோடி

உலகின் பழமையான மொழியான தமிழை கற்க, நாட்டின் பிற பகுதிகளிலும் ஆர்வம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். மன்கி பாத் உரையில், இதுவே மொழியின் வலிமை, பாரதத்தின் ஒற்றுமை என பாராட்டினார். இந்தாண்டு தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் என இந்தியா எல்லா துறைகளிலும் முத்திரையை பதித்துள்ளதாக கூறினார். ஆபரேஷன் சிந்துார் நாட்டின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News December 28, 2025
அஜிதா விஜய்யை மதிக்கவில்லை: பெண் நிர்வாகி

<<18684988>>அஜிதா<<>> விஜய்யின் காரை வழிமறித்தது, அவருக்கு மதிப்பளிக்காமல் செய்த செயல் என கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா பானு கூறியுள்ளார். இதனால் விஜய் பெண்களை அலட்சியப்படுத்துகிறார் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கச் சிலர் முயற்சிப்பதாக கூறிய அவர், தலைமையிடம் பேசியிருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் என்றார். மேலும், தலைவரின் காரை மறிப்பது ஒரு நிர்வாகிக்கு அழகல்ல என்றும் சாடியுள்ளார்.
News December 28, 2025
வீடுகள் விற்பனையில் சரிவு கண்ட 7 நகரங்கள்!

நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையிலும், 2025-ம் ஆண்டில் நாட்டின் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 14% சரிந்துள்ளது. 2024-ல் 4.5L வீடுகள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் அது 3.9L ஆக குறைந்துள்ளது. இதற்கு அரசியல் பதற்றம், IT-ல் நிலவும் பணிநீக்கம் போன்றவை முக்கியக் காரணங்களாக உள்ளன. எந்தெந்த நகரங்களில் வீடுகள் விற்பனை எவ்வளவு சரிந்துள்ளது என்பதை swipe செய்து பார்க்கலாம்.


