News August 16, 2024
கும்பகோணத்தில் ரூ.1.6 கோடிக்கு பருத்தி ஏலம்

தஞ்சாவூர் விற்பனை குழு கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் கண்காணிப்பாளர் பிரியாமாலினி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் குவிண்டாலுக்கு சராசரி விலையாக ரூ.6,789-க்கும் ஏலம் போனது. ஏலம் போன மொத்த பருத்தியின் மதிப்பு 1.6 கோடி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கும்பகோணம், கடலூர், விழுப்புரம், தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 9, 2025
தஞ்சை: தளிர் திட்டத்தை பார்வையிட்ட கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடில்லா குழந்தைகளாக வளர்த்திடும் “தளிர் “திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை இன்று துவக்கி வைத்து குழந்தையின் நீளத்தினை இன்பன்டோமீட்டர் கருவி கொண்டு அளவிடும் பாணியை ஆட்சியர் பார்வையிட்டார்
News August 9, 2025
வீட்டின் பூட்டை உடைத்து நான்கு பவுன் நகை கொள்ளை

தஞ்சாவூர் தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நான்கு பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வீரமணிண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 9, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் இந்த முகாம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார். மேலும் இந்த முகாமில் 5,86,000 குழந்தைகள் மற்றும் 1,98,000 பெண்களும் பயன் அடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.