News August 16, 2024
மத்திய, மாநில அரசுக்கு எதிராக அதிமுக செயற்குழு தீர்மானம்

அதிமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டி தமிழக அரசுக்கு எதிராக ஒரு தீர்மானமும், தொழில் வளர்ச்சி குறைந்த காரணத்தை கண்டறிந்து தீர்வு காணக்கோரி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Similar News
News October 19, 2025
24 வயது பெண்ணை திருமணம் செய்த 74 வயது தாத்தா ❤️❤️

₹1.8 கோடி பணம் கொடுத்து தன்னை விட 50 வயது குறைந்த பெண்ணை இந்தோனேசியாவைச் சேர்ந்த தார்மன்(74) திருமணம் செய்துள்ளார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, போட்டோகிராபருக்கு பணம் தராமல் மாப்பிள்ளை தப்பியோடி விட்டார் என புகார் எழுந்தது. மேலும், மணப்பெண்ணுக்கு அளித்த செக்கும் போலியானதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை, தாங்கள் ஹனிமூனில் இருப்பதாக தார்மன் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
டியூட், பைசன் 2 நாளில் இவ்ளோ கோடி வசூலா?

தீபாவளி விருந்தாக வெளியான 3 தமிழ் படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. டியூட் படம் முதல் நாளில் ₹22 கோடி வசூலித்த நிலையில், 2 நாள்களில் ₹45+ கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘பைசன்’ 2 நாள் முடிவில் ₹12+ கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாணின் டீசல் படம் 2 நாள்களில் ₹2+ கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
News October 19, 2025
படிப்பு செலவுக்கு ₹20 லட்சம் தரும் வங்கி; முற்றிலும் Free!

பள்ளி மாணவர்கள், இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM & வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ₹15,000-₹20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship வழங்குகிறது SBI. இதற்கு, குடும்ப ஆண்டு வருமானம், பள்ளி மாணவர்களுக்கு ₹3 லட்சம், மற்றவர்களுக்கு ₹6 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில் பயனடைய <