News August 16, 2024
ஏரியூர் அருகே மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவர்

ஏரியூர் அருகே உள்ள ஒட்டன் ஊரை சேர்ந்தவர் கோவிந்தன் இவரும் இவரது மனைவி சின்னப்பொண்ணு ஆகிய இருவரும் ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். ஆடு விற்பனையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று கோவிந்தன் மனைவி சின்னப்பொண்ணை கல்லால் தாக்கி கொலை செய்து, பின் அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏரியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
Similar News
News September 16, 2025
தர்மபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ தர்மபுரி நகராட்சி – பிபிசி திருமண மண்டபம்
✅ தர்மபுரி வட்டாரம் – புதிய பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், மண்டு வளாகம்
✅ பென்னாகரம் வட்டாரம் – VPRC கட்டிடம், ஜெலமாரம்பட்டி
✅ நல்லம்பள்ளி வட்டாரம் – PUMS, தின்னஹள்ளி பள்ளி வளாகம்
✅ ஏரியூர் வட்டாரம் – ராமசாமி பொன்னம்மாள் திருமண மண்டபம்
✅ ஏரியூர் வட்டாரம் – கெந்தனஹள்ளி சமுதாயக் கூடம் (SHARE IT)
News September 16, 2025
தருமபுரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தருமபுரியில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு, செப்டம்பர் 18 முதல் கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ், இலவச உணவு, சிற்றுண்டி வழங்கப்படுவதுடன், ரூ.5,600 ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News September 15, 2025
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

2025-ஆம் ஆண்டு தீபாவளி (அக்.20) முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க விரும்புவோர் 10.10.25-க்குள் விண்ணப்பங்கள் https://www.tnesevai.tn.gov.in முகவரியில் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். வெடிபொருள் சட்டம், பாதுகாப்பு விதிமுறைகள், தீ தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.