News August 16, 2024

பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

image

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.

Similar News

News January 16, 2026

பெரம்பலூர்: ஆன்லைன் வழியாக எளிதில் புகார் அளிக்கலாம்!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <>www.cybercrime.gov.in<<>> என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். மறக்காமல் இதை SHARE செய்யவும்!

News January 16, 2026

பெரம்பலூரின் வரலாற்று உண்மை

image

தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்த ‘பெரும்புலியூர்’ தான் இன்று ‘பெரம்பலூர்’ ஆக மாறியுள்ளது. இங்கு பராமத்து பணிக்காக குன்னம் பகுதியில் ஏரியை ஆழப்படுத்திய பொழுது பல நூறு ஆண்டுகள் முன்னால் கடலில் வாழ்ந்த உயிரனங்களின் படிமம் கண்டெடுக்கபட்டது. இதனால் ஒரு காலத்தில் பெரம்பலூர் கடல்பகுதியாக இருந்து இருக்கலாம் என ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்கள் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 16, 2026

பெரம்பலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

பெரம்பலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

error: Content is protected !!