News August 16, 2024
கோவைக்கு இனி HAPPYதான்

கோவை மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
கோவையில் கணவன் மனைவி தற்கொலை!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காடாம்பாடி, செங்கத்துறை அன்புநகர் பகுதியில் வசித்து வந்த ஆண்டவர் (54) மற்றும் அவரது மனைவி மணிமேகலை (44) ஆகிய இருவரும் நேற்று தற்கொலை செய்து கொண்டனர். விசைத்தறி குடோனில் வேலை செய்து வந்த இந்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. கடன் தொல்லையால் இந்த முடிவை எடுத்தார்களா? அல்லது குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை!
News September 14, 2025
கோவை: மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

கோவை: கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் , தனது மனைவி பிரியதர்ஷினி மீது நடத்தையில் சந்தேகம் கொண்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக, நேற்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோபிநாத், பிரியதர்ஷினியை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 13, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (13.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.