News August 16, 2024

வேலூரில் ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

image

நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவில், 11 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 583 அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.

Similar News

News August 10, 2025

வேலூர் மக்களே கனமழை எச்சரிக்கை – உஷார்!!

image

வேலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நேற்றை போலவே இன்றும் (ஆக.10) இரவு வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை வர வாய்ப்புள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம். உணவு, மெழுகுவர்த்தி, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாய் எடுக்கும் வண்ணம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்க.

News August 10, 2025

முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் கலந்தாய்வு

image

வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில், முதுநிலை பட்டப்படிப்புகளில் உள்ள 240 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 11) தொடங்குகிறது. இதில் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும். www.tngasa.in என்ற இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

வேலூரில் இப்படியொரு அதிசயமா!

image

வேலூர் மாவட்டம் ரங்காபுரம் மலைமேல் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில் உள்ளது. மே மாதம் பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்த பிறகு அவரின் தலை மீது பூ வைக்கப்படும். அதில் 1 எலுமிச்சை பழம் வைப்பார்கள். அதில் ஒரு ஈ பறந்து வந்து சில வினாடிகள் அமர்ந்து விட்டு பறந்து சென்றுவிடும். பின், பழம் தானாக சுற்றி கீழே விழும். அதை ஒருவர் பிடித்து கொள்வார். பிறகு அருள்வாக்கு சொல்லப்படும். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!