News August 16, 2024
புதுக்கோட்டை அருகே இளம்பெண் மர்ம மரணம்

கீரனூர் அருகே ஒள்ளத்துப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (38) – போதும்பொண்ணு (28) தம்பதி. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போதும்பொண்ணு வீட்டில் மயங்கி கிடந்ததாக தெரிகிறது. மயங்கி கிடந்தவரை அவரது பெற்றோர் வந்து எழுப்பிய போது, காதில் ரத்தம் வழிந்து, வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Similar News
News January 21, 2026
புதுக்கோட்டை: கிரக தோஷம் நீக்கும் கோயில்!

திருமயம் அடுத்த கண்ணனூரில் பாலசுப்ரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டில் முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலில் முருகன் 4 கரங்களுடன், யானை வாகனத்துடன் காட்சி தருவது சிறப்பாகும். இங்கு கருவறைக்கு நேராக நவக்கிரகங்களைக் குறிக்கும் விதமாக 9 துவாரங்களுடன் கல் ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் வழியே முருகனை தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க
News January 21, 2026
கட்டுமாவடியில் சிறப்பு முகாம்! கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் 02.08.25 முதல் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக புதுகை மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்படுத்து வருகிறது. இதில் (ஜன.24) சனிக்கிழமை 34-வது நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் புதுகை மாவட்டம் கட்டுமாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு வகையான பரிசோதனை செய்யப்படுகிறது. என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
புதுக்கோட்டை: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

புதுகை மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


