News August 16, 2024

3 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கம்

image

வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டி வரும் உல்லாச பயணிகளை குஷி படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் மலை ரயில் இயக்கபடுகிறது. இந்த வகையில் (16 ம் தேதி, 17ம் தேதி) ஆகிய தேதிகளிலும், வருகிற (25ம் தேதியும்) ஆக 3 நாட்கள் குன்னூர் – ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்க படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Similar News

News February 6, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பிப். 20-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்களும் நேரில் பங்கேற்க உள்ளனர். எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News February 6, 2026

நீலகிரி: கார் மீது லாரி ஏறி பயங்கர விபத்து!

image

நீலகிரி: குன்னூர் அருகே அருவங்காடு எம்.ஜி. காலனி பகுதியில் நேற்று உதகையிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் இருந்த கடையின் மீது மோதி கார் ஒன்றின் மேல் ஏறி நின்றது. இச்சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.

News February 6, 2026

குன்னூர் மார்க்கெட்டின் புகைப்படம் வைரல்!

image

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

error: Content is protected !!