News August 16, 2024
குமரி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

குளச்சல் ஆலஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கின்சிலின் பிரபு(40). சி.ஆர்.பி.எப் வீரர். இவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கின்சிலின் பிரபு மீது தாயாரே புகார் செய்தார். அதன் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கின்சிலின் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News January 9, 2026
குமரியில் 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்..!

நாகர்கோவில் கலுங்கடியை சேர்ந்தவர் நிகாஷ் (15). இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் நித்திஷ் என்பவருக்கு புத்தகம் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவரை ஹரிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சேர்ந்து தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதுகுறித்து நிகாஷ் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் நேற்று (ஜன.8) வழக்குப்பதிந்து ஹரிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
News January 9, 2026
குமரி: NO EXAM..ரூ.56,100 சம்பளத்தில் ARMY வேலை..!

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.Tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் பிப்.5 க்குள் இந்த <
News January 9, 2026
குமரி: பைக் மோதி விபத்து; 3 பேர் காயம்..!

புதுக்கடை அருகே முன்சிறை பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் தனது மகனுடன் பைக்கில் உணவு வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் விமல்ராஜ் பைக் மீது மோதியது. இதில் விமல் ராஜ், விஷ்ணு உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


