News August 16, 2024
வெப் சீரிஸ் இயக்குநருடன் சமந்தா காதல்?

FAMILY MAN-2 வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நித்மோரும், சமந்தாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாக சைதன்யாவை டைவர்ஸ் செய்த பிறகு, நடிப்பில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில், ராஜ் நித்மோர் இயக்கிய FAMILY MAN-2 வெப் சீரிசில் நடித்த சமந்தா, அவர் இயக்கி வரும் சிட்டாடல் ஹனி பன்னி சீரிசிலும் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் 2 பேரும் காதல் வயப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Similar News
News August 13, 2025
டாஸ்மாக் கடைகளில் 12,000 பில்லிங் மெஷின்கள்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 12,000 பில்லிங் மெஷின்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இனி மது பாட்டிலுக்கு ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News August 13, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை.. இன்று முதல் சிறப்பு பஸ்கள்

ஆக.15, 16, 17-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் <<17375212>>சிறப்பு பஸ்களை<<>> அறிவித்துள்ளது. கடைசி நேர சிரமத்தை தவிர்க்கும் வகையில் இதுவரை சுமார் 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நீங்க கிளம்பியாச்சா?
News August 13, 2025
பாசமும், மரியாதையும்.. ரஜினிக்கு கமல் வாழ்த்து

‘எங்களைப் போன்று (கமல், ரஜினி) நண்பர்கள் சினிமாவில் இருந்ததில்லை, இனி இருக்கப் போவதுமில்லை’ என்று கமல்ஹாசன் கூறியது இன்றும் இருவரது ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும், மரியாதையுடனும் கொண்டாடுவதாக கமல் பாராட்டியுள்ளார். ‘கூலி’ படமும் மாபெரும் வெற்றி பெற அவர் வாழ்த்தியுள்ளார்.