News August 16, 2024
4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு : RMC

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாள்கள் கனமழை பெய்யக்கூடும் என RMC தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று RMC கூறியுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
திமுக கூட்டணிக்கு தற்போது தான் ரோஷம் வந்துள்ளது: EPS

தூய்மை பணியாளர்களின் வாக்குகளை பெறுவதற்காக எதிர்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். தற்போது அவர்களை சமாதானப்படுத்த அறிவிப்புகளை வெளியிடுகிறார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஆம்பூரில் மக்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், தூய்மை பணியாளர்கள் கைது செய்ததை கண்டித்து MP சு.வெங்கடேசன், பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளதாகவும், தற்போது தான் அவர்களுக்கு ரோஷம் வந்துள்ளதாகவும் கூறினார்.
News August 15, 2025
2 ஹெலிகாப்டர்களிலிருந்து PM மோடிக்கு மலர் தூவப்படவுள்ளன

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு PM மோடி உரையாற்றயுள்ளார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
News August 15, 2025
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அன்பில் மகேஷ் சவால்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கல்விச்சூழல் தொடர்ந்து சரிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், உண்மையிலேயே தங்களுக்கு தமிழக அரசுப்பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி ‘தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி என்னவானது?’ என கேளுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.