News August 16, 2024
நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது. 123 சாதா இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் கப்பலில் உள்ளது. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டியுடன் ₹7500, சாதா இருக்கைக்கு ₹5000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கப்பலில் பயணிக்க www.sailindsri.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
Similar News
News January 28, 2026
அரியலூர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜனவரி – 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (30.01.2026) வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News January 28, 2026
TET தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் 5% குறைப்பு

தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நடத்தப்படும் TET தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 5% குறைக்கப்பட்டு 50% ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 15% குறைக்கப்பட்டு 40% ஆகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு 60% தொடரும். SHARE IT.
News January 28, 2026
விசிகவுக்கு Yes ராமதாஸுக்கு NO.. ஸ்டாலின் போடும் கணக்கு

DMK கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையலாம் என பேசப்பட்ட நிலையில், கூட்டணிக்கு பாமக தேவையில்லை என CM ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக DMK கூட்டணியில் VCK அங்கம் வகிப்பதாலும், கொள்கை ரீதியாகவும் ஒத்துப்போவதாலும் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தும் எந்தக் கட்சியும் வேண்டாம் என கூறிவிட்டாராம். எனவே, தான் கடந்த 2 நாள்களாக DMK அரசை கடுமையாக சாடி ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறாராம்.


