News August 16, 2024
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச சேலை

திருத்தணி முருகன் கோயில் மற்றும் உப கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் சேலை, வேஷ்டி மற்றும் துணி வகைகளை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை இன்று திருத்தணி சந்திரன் எம்எல்ஏ பெண் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினார். இதில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் மு .நாகன், திமுக நிர்வாகிகள் ஜி எஸ் கணேசன், மிக்ஸி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 9, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சுமார் 2 லட்சம் கால்நடைகளுக்கு தோல்கழலை நோய் தடுப்புத் திட்டத்திற்கான பூஸ்டர் தடுப்பூசிப்பணி 03.09.2025 முதல் 30.09.2025 வரை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசியினை தவறாது போட்டு கொள்ளுமாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)
News September 9, 2025
திருவள்ளூர்: whats App இருக்கா உஷார்!

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை whats App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்தத் துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News September 9, 2025
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 383 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் 383 மனுக்கள் பெறப்பட்டது. இதில் நிலம் சம்பந்தமாக 39 சமூக பாதுகாப்பு திட்டம் 22 வேலை வாய்ப்பு வேண்டி 28 பசுமை வீடு அடிப்படை வசதி வேண்டி 19 இதர துறை சார்பாக 275 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் அவர்கள் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.