News August 16, 2024
116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 13, 2026
தமிழ்நாட்டில் பொங்கல்.. பிற மாநிலங்களில் என்ன பெயர்?

இந்தியாவில், சூரியன் மகர ராசிக்குள் நுழைவதையும், அறுவடை திருநாளையும் மகர சங்கராந்தி என்ற பெயரில் மக்கள் கொண்டாடுகின்றனர். இது, நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களிலும், மரபுகளிலும் கொண்டாடப்படுகிறது. எந்தெந்த மாநிலங்களில் என்ன பெயர்களில் கொண்டாடப்படுகிறது என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News January 13, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனிடையே, பொங்கலுக்கு முன்பாக மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார். இந்நிலையில், வழக்கமாக உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நாள் அன்றோ (ஜன.15) (அ) நாளையோ தொகை உயர்வு பற்றிய அறிவிப்பை CM வெளியிடுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெடியா?
News January 13, 2026
மோடி முன்னிலையில் ஜி.வி.பிரகாஷ் பாடல் ரிலீஸ்!

டெல்லியில் PM மோடி முன்னிலையில் திருவாசகத்தின் முதல் பாடலை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாளை இசைக்க உள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜிவி பிரகாஷ் தனது இசை கச்சேரியில் இதனை நிகழ்த்த உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏழை தாயின் மகன் என்ற மோடியின் 75வது பிறந்தநாள் பாடலுக்கு அவர் இசையமைத்திருந்தது கவனிக்கத்தக்கது.


