News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News January 31, 2026
சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.81 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 31, 2026
ஓபிஎஸ் தனித்து போட்டியிட விரும்பும் திமுக

முன்னாள் CM OPS, தனித்து நிற்பதே தங்களுக்கு சாதகம் என ரகசிய ஆய்வுக்கு பின் திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், திமுகவுடன் கூட்டணி வைத்து களமிறங்கினால், அவரது ஆதரவு ஓட்டுகள் திமுகவிற்கு கிடைக்காது என்றும், அதே நேரத்தில் OPS தனித்து நின்றால் அதிமுக ஓட்டுகள் பிரிவதுடன் திமுகவின் வெற்றிக்கும் வழிவகுக்கும் எனவும் பேசப்பட்டுள்ளதாம்.
News January 31, 2026
தீவிர சிகிச்சை பிரிவில் H.ராஜா.. என்னாச்சு?

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா அப்பல்லோ ஹாஸ்பிடலில் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். மூளை பக்கவாதம் என கருதி முதலில் அருகிலுள்ள ஹாஸ்பிடலுக்கும், பின்னர் அங்கிருந்து அப்பல்லோவுக்கும் அழைத்து செல்லப்பட்டார். தற்போது ICU-வில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தேறி வருவதாக தகவல் வந்துள்ளது.


