News August 15, 2024
அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பாராட்டு

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் 18540 பணியாளர்களில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர், பரிசோதகர், ஓட்டுநர் பயிற்றுனர், அலுவலக உதவியாளர், மேற்பார்வையாளர் மற்றும் கிளை மேலாளர் என அனைத்து மண்டலங்களையும் சேர்த்து 316 நபர்களுக்கு இன்று பரிசளிக்கப்பட்டது. பணியாளர்களுக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News July 9, 2025
தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

இன்று (09.07.2025) காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி. வெ.ஆறுச்சாமி, தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தூய்மைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
News July 9, 2025
விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 ஆயிரத்து 918 ஏக்கர் பரப்பில் நெல் உற்பத்திக்கு, மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம், செயல்படுத்தப்படுகிறது என வேளாண் துறை அறிவித்துள்ளது.
News July 9, 2025
விழுப்புரம் அருகே தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

விராட்டிக்குப்பம் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவர், கடந்த ஜூன் 6ம் தேதி 16 வயதுள்ள மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சாந்தமூர்த்தியை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். எஸ்.பி மற்றும் ஆட்சியர் உத்தரவின் பேரில் நேற்று விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சாந்தமூர்த்தியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.