News August 15, 2024
திருச்சி மாவட்டச் செயலாளர் அழைப்பு

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு, வடக்கு, மாநகரம் மாவட்ட கழக செயலாளர்கள் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் எதிர் கட்சி தலைவர் எடப்பாடியார் வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.சந்திரசேகர் இல்ல நிகழ்ச்சிக்கு வருகை தர இருக்கிறார். அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Similar News
News December 21, 2025
மக்கள் நடமாட தடை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், ஜன.5 முதல் 7 ஆம் தேதி வரையிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
திருச்சி: ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

திண்டுக்கல் மாவட்டம் சாமியார் தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (45). அரசு பஸ் நடத்துனரான இவர் நேற்று திருச்சி வந்த பஸ்சில் பணியில் இருந்துள்ளார். அப்போது பஸ் தீரன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சிவக்குமார் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 20, 2025
திருச்சி: 8th போதும்.. அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


