News August 15, 2024
பள்ளி, கல்லூரி மாணவிகள் மரணம்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாணவிகள் நெல்லை, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளித்தபோது, இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. அவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
Similar News
News September 15, 2025
ஒப்பந்த நர்ஸ்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: SC

ஒப்பந்த நர்ஸ்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று SC தெரிவித்துள்ளது. ஒப்பந்த நர்ஸ்களின் சம்பளம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இந்த நர்ஸ்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுவதாக கடுமையாக சாடியுள்ளது. இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கும் நிலையில், சம்பளம் கொடுக்க பணமில்லையா என்றும் SC கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக மத்திய அரசு, நர்ஸ் சங்கம் பதிலளிக்க SC உத்தரவிட்டுள்ளது.
News September 15, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

<<17591466>>பஞ்சாப் நேஷனல் வங்கி<<>>, கரூர் வைஸ்யா வங்கிகளை தொடர்ந்து யுகோ பொதுத்துறை வங்கியும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. செப்.10 முதல் MLCR வகை கடன் வட்டி விகிதங்களில் 5 அடிப்படை புள்ளிகள் (0.05%) குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது, MLCR வகை கடன்களுக்கான வட்டி விகிதம் 8.90%-ல் இருந்து 8.85% ஆக குறைந்துள்ளதால், வீட்டு, வாகன கடன்களின் EMI தொகை குறைகிறது.
News September 15, 2025
ஸ்மார்ட் ரேஷன் கார்டு: அப்ளை செய்ய, அப்டேட் செய்ய…

*ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க அல்லது ஏற்கெனவே உள்ள கார்டில் மாற்றம் செய்ய https://tnpds.gov.in/ தளத்துக்கு செல்லவும்.
*ஸ்மார்ட் கார்டு விண்ணப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
*அதில், குடும்ப உறுப்பினர்கள் விவரம், முகவரி, ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை பதிவிடவும்.
*தேவையான ஆவணங்களை, குடும்பத்தினர் போட்டோக்களை பதிவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். ஸ்மார்ட் கார்டு கிடைத்துவிடும். SHARE IT.