News August 15, 2024
அலோபதி மருந்துகளால் உயிரிழப்பு: ராம்தேவ்

அலோபதி மருந்துகளை உட்கொள்வதால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பதாக பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். மருத்துவ சுயசார்பு என்பது இன்னும் கனவாகவே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக உச்சநீதிமன்றத்தில் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இந்த வழக்கு கடந்த ஆக. 13ஆம் தேதி முடித்து வைக்கப்பட்டது.
Similar News
News November 5, 2025
SIR கணக்கெடுப்பில் குளறுபடி: திமுக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் வாக்காளர் SIR பணி தொடங்கிய நிலையில், பெரும்பாலான இடங்களில் கணக்கீடு படிவங்கள் தரப்படவில்லை என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார். ஓரிரு தொகுதிகளில் படிவங்களை கொடுத்துவிட்டு, மறுநாளே பூர்த்தி செய்துதர கேட்பதாகவும், 2002-க்கு பிறகு வெளியிடப்பட்ட அனைத்து வாக்காளர்கள் பட்டியலும் செல்லுபடி தன்மை அற்றதாக ஆகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 5, 2025
இன்சூரன்ஸ் பணத்துக்காக போலி டெத் டிராமா!

₹25 லட்சம் பணத்துக்காக கணவன் இறந்துவிட்டதாக நாடகமாடிய இளம்பெண் மற்றும் அவரது கணவன் போலீசில் சிக்கியுள்ளனர். லக்னோவை சேர்ந்த ரவி சங்கர், 2023 ஏப்.9 அன்று இறந்துவிட்டதாகக் கூறி, ஏப்.21 அன்று இன்சூரன்ஸ் கம்பெனியில் மனைவி கேஷ் குமாரி டாக்குமெண்ட் சமர்ப்பித்துள்ளார். பின்னர், கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தில் தம்பதி ஜாலியாக இருப்பதை அறிந்த போலீசார் இருவரையும் கொத்தாக தூக்கி சிறையில் அடைத்துள்ளனர்.
News November 5, 2025
IND A அணி அறிவிப்பு: ரோஹித், கோலிக்கு இடமில்லை

SA A அணிக்கு எதிரான ODI தொடருக்கான (LIST A), IND A அணி அறிவிக்கப்பட்டுள்ளது. IND A அணி: *திலக் வர்மா (C) *கெய்க்வாட் (VC) *அபிஷேக் சர்மா *ரியான் பராக் *இஷான் கிஷன் *ஆயுஷ் பதோனி *நிஷாந்த் சிந்து *விப்ராஜ் நிகம் *மானவ் சுதர் *ஹர்ஷித் ராணா *அர்ஷ்தீப் சிங் *பிரஷித் கிருஷ்ணா *கலீல் அகமது *பிரப்சிம்ரன் சிங். ரோஹித் – கோலி அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


