News August 15, 2024
திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதில் லால்குடி, மணச்சநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர் பகுதியில் மொத்தத்தில் நேற்றைய மழையின் அளவு 251.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 10.46 மில்லி மீட்டர் மழையின் பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 31, 2025
திருச்சி: +2 மாணவி நீரில் மூழ்கி பலி

முசிறி அடுத்த தண்டலைப்புத்தூரை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகள் தர்ஷினி (17). பிளஸ்-2 படித்து வரும் அவர், நேற்று முன்தினம் தனது உறவினர்களுடன் முக்கொம்பிற்கு சென்றுள்ளார். அப்போது ஆற்றில் இறங்கி குளித்த அவர், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 31, 2025
புத்தாண்டு கொண்டாட்டம் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31-ம் தேதி இரவு 9 மணிமுதல் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள் உட்பட பல்வேறு பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வாகனச்சோதனை பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.