News August 15, 2024

அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோவின் வீரமுத்துவேல்

image

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக அரசின் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் இன்று நடைபெற்றது. இதில் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் முனைவர் ப.வீரமுத்துவேல் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

Similar News

News February 27, 2026

சென்னை VGP தீம் பார்க்கில் விபத்து!

image

சென்னை ஈ.சி.ஆர்., சாலையில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் வி.ஜி.பி., பொழுது போக்கு பூங்காவில் நேற்று சுற்றுலா வந்த கல்லூரி மாணவி ஜப்ரின் பாத்திமா என்பவர் ராக் & ரோல் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். ராட்டினத்தில் சீட் பெல்ட் அணிவதற்குள் ஊழியர்கள் ராட்டினத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ராட்டினத்தை இயக்கிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

News February 27, 2026

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

image

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் வளர்ச்சி பல்கலைக்கழகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில், 20,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தோர் முகாமில் பங்கேற்கலாம். ஷேர்!

error: Content is protected !!