News August 15, 2024
குறைந்த நேரம் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர்கள்

குறைந்த நேரம் சுதந்திர தின உரையாற்றிய இந்திய பிரதமர்கள் பற்றி பார்க்கலாம். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர், சுருக்கமாக சுதந்திர தின உரையாற்றிய பிரதமர்கள் ஆவர். 1954 ஆம் ஆண்டு நேரு 14 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றிய நிலையில், 1966 ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் வெறும் 14 நிமிடங்களே உரை நிகழ்த்தியுள்ளார். நேருவின் அதிகபட்ச சுதந்திர தின உரை நேரம் 72 நிமிடங்கள் ஆகும்.
Similar News
News August 15, 2025
தலைமுறைகள் கடந்து தாக்கம் ஏற்படுத்திய ரஜினி: PM வாழ்த்து

திரையுலகில் ரஜினி 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை PM மோடி வாழ்த்தியுள்ளார். திரைப்படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து தலைமுறைகள் கடந்தும் ரஜினி மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அவரது திரைப்பயணம் சிறப்பு மிக்கதாக இருப்பதாகவும் PM மோடி தெரிவித்துள்ளார். மேலும், இனிவரும் காலங்களிலும் தொடர் வெற்றிகளை பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் வாழ்த்தியுள்ளார்.
News August 15, 2025
உடலின் கழிவுகளை நீக்கும் லெமன் டீ

லெமன் டீ அருந்தும்போது *எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், & தாமிர சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தரும், மனஅழுத்தம் நீங்கவும் உதவும் *மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும். SHARE IT!
News August 15, 2025
திமுகவின் வரலாறு இப்படிதான்: அண்ணாமலை சாடல்

குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பதே திமுக வரலாறு என அண்ணாமலை சாடியுள்ளார். நாகர்கோவில் திமுக நிர்வாகி ராஜன், கோயிலுக்கு ஒதுக்கிய ஒன்றரை கோடி நிதியை சுருட்டி விட்டதாகவும், இது குறித்து DVAC-ல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சமூக விரோதிகளை வளர்த்துவிடும் திமுகவிற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.