News August 15, 2024
குமரி விடியல் பயண திட்ட விவரம்

குமரி மாவட்டத்தில் 840 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 400 பேருந்துகள் மாவட்டத்திற்குள்ளும், அவற்றில் 320 பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். அந்தவகையில், இதுவரை மொத்தம் 35.76 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News May 7, 2025
தேசிய அளவிலான வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

2024 – 2025ஆம் கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று (ஏப்ரல். 30 ) பாராட்டி வாழ்த்தினார்.
News May 7, 2025
UPDATE: விபத்தில் டிரைவர் குழந்தைகள் படுகாயம்

குமாரகோவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 சுற்றுலா வேன்கள் நேருக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவர் குழந்தைகள் உட்பட படுகாயமடைந்த 15பேர், ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிட்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News May 7, 2025
போதை பழக்கத்தில் இருந்து மீண்ட வாலிபர் தற்கொலை

அருமனை காவூர்கோணம் பகுதியைச் சேர்ந்த ஜீபின், பைக் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையாகி, அதில் இருந்து மீண்ட ஜீபின், நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜீபின் பெற்றோர் அருமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார், ஜீபின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இன்று வழக்கு பதிவு செய்தனர்.