News August 15, 2024
பதவியை ராஜினாமா செய்தது ஏன்? குஷ்பு விளக்கம்

மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து விளக்கமளித்த அவர், NCW பதவி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவும், அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதால், தற்போது சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
Similar News
News August 16, 2025
கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரம் எது?

இன்று கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் விரதமிருந்து நாள் முழுவதும் கிருஷ்ணரை வழிபடுவார்கள். பஞ்சாங்க கணிப்பின் படி, ஆகஸ்ட் 16 அதிகாலை 1:41 முதல் இரவு 11:13 வரை அஷ்டமி திதி நீடிக்கிறது. சனிக்கிழமை என்பதால் காலை 10:30 முதல் 11:50 வரை கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரமாக குறிப்பிடப்படுகிறது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் பூஜைகளை செய்து வழிபடவும் உகந்த நேரமாகும்.
News August 16, 2025
EPS-க்கு எதிராக அணிதிரளும் அதிமுக சீனியர்கள்

அன்வர் ராஜா, மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜு என பல மூத்த தலைவர்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இபிஎஸ் உரிய மரியாதை அளிக்காததே அவர்களது புகாராக உள்ளதாகவும், விரைவில் அவர்கள் இபிஎஸ்-க்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News August 16, 2025
32 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

அடுத்த 2 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 32 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போவதாக IMD எச்சரித்துள்ளது. காஞ்சி, கடலூர், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், சேலம், அரியலூர், திருச்சி, தஞ்சை, நாகை, கோவை, தென்காசி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.