News August 15, 2024

கத்தியால் குத்தி விட்டு தப்பியோட்டம்

image

புதுச்சேரி சோதனைக்குப்பம் ஐயனார் கோவில் வீதியை சேர்ந்தவர் இளங்கோவன். பால் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை 1 மணியளவில் புதுவை காந்தி சிலை பின்புறம் அமர்ந்திருந்தார். அங்கு சுற்றித்திரியும் வேலு, குரு, சதீஷ் ஆகியோர் இளங்கோவனின் செல்போனை பறித்துக் கொண்டு கத்தியால் தோள் பட்டையில் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

புதுச்சேரி: முதல்வருக்கு புத்தகம் அளிப்பு!

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா வீட்டுத்தொடர்பு இயக்கம் சார்பில், அவரது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ். தென்பாரத தர்மஜாக்ரண் ப்ரமுக் இராம இராஜசேகர் அவர்கள், புதுச்சேரி மாவட்ட அமைப்பாளர் முகுந்தன், மாவட்ட சம்பர்க்கப்ரமுக் ஸ்டார் சுரேஷ் சந்தித்து, ஆர்.எஸ்.எஸ் பிரசுரம் மற்றும் புத்தகம் அளித்தார். உடன் உள்துறை அமைச்சர் இருந்தனர்.

News November 9, 2025

புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், BPO மற்றும் கால் சென்டர் நடத்துபவர்கள் மத்திய, மாநில அரசிடமிருந்து முறையான அனுமதி பெறுவது கட்டாயம். மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே அவர்கள் தங்கள் சேவையைத் தொடர வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாதவர்கள் உடனடியாக அனுமதி பெற வேண்டும் மீறும் பட்சத்தில், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

News November 9, 2025

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி அழைப்பு

image

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்தியில், தெரு நாய்களுக்கு உணவளிக்க, பிரத்தியேகமான இடங்களை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தெரு நாய்களுக்கு உணவளிக்க ஏதுவான இடங்கள் இருப்பின், அவற்றின் விவரங்களை உழவர்கரை நகராட்சியின் 75981 71674 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில், இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!