News August 15, 2024

அம்பை எம்எல்ஏ வீட்டில் புகுந்து மர்ம நபர்?

image

அம்பை சட்டமன்ற உறுப்பினராக உள்ள அதிமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையாவின் வீடு சென்னை அசோக் நகரில் உள்ளது. குடும்பத்துடன் அவர் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற நிலையில், ஆக.,12 ஆம் தேதி மாலை அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்குமிங்கும் சுற்றியுள்ளார். இது குறித்து அவரது மகன் இசக்கி துரை 13 ஆம் தேதி கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Similar News

News August 23, 2025

நெல்லை: டிகிரி போதும்! ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

நெல்லை மக்களே; வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தமிழகத்தில் 894 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு 20 – 28 வயதிற்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணபிக்க இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவர்களுக்கு Rs.24,050 – 64,480 வரை சம்பளம் வழங்கப்படும்; விண்ணப்பிக்க கடைசி நாள் 28.08.25. *ஷேர் செய்தால் பிறருக்கும் உதவும்.

News August 23, 2025

நெல்லை: மாணவர்கள் & பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களே; உங்களுக்கு ஏதேனும் பாலியல் மற்றும் தீண்டாமை ரீதியான புகார்கள் இருந்தால் நீங்கள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த எண் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் உதவி எண் ஆகும். மாணவர்களின் கல்வி சந்தேகங்கள் மற்றும் புகார்கள் குறித்து 24 மணி நேரமும் இலவசமாக தொடர்புகொள்ள இந்த எண்ணை பயன்படுத்தலாம். *ஷேர் செய்யுங்கள்*

News August 23, 2025

சுவரில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க நடவடிக்கை

image

நெல்லை மாவட்டத்தில் பூங்காக்கள், மேம்பாலங்கள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் அழகுபடுத்தப்பட்டு, சமூக நீதி வாசகங்கள் எழுதப்படுகின்றன. திறந்தவெளி சிறுநீர் கழிக்காத மாநகரமாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கிறது. பாளை அரசு மருத்துவமனை எதிரே உள்ள காந்திமதி பள்ளி சுவரில், “இங்கு சிறுநீர் கழிக்காதீர், மாந்திரீக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் சிரிப்பையும் சிந்தனையும் ஏற்படுத்தி உள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!