News August 15, 2024
இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

ஈரோடு மாவட்டம் கனரா வங்கியின் மூலம் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் சுயதொழில் தொடங்குவதற்காக கோழி வளர்ப்பு பயிற்சி 10 நாட்கள் இலவசமாக உணவு உடையுடன் வழங்குகின்றன. இப்பயிற்சியானது ஈரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Similar News
News October 27, 2025
போலி ‘Boat’ ஹெட்போன்கள் விற்பனை குறித்து எச்சரிக்கை!

ஈரோடு மாவட்ட காவல்துறை தெரிவித்ததாவது: சமூக ஊடகங்கள், குறிப்பாக Instagram போன்ற தளங்களில் ‘Boat’ ஹெட்போன்கள் மலிவான விலையில் உண்மையான தயாரிப்புகள் என கூறி சில மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு போலியான வலைத்தளங்கள் மூலம் தனிப்பட்ட தகவல்களை திருடும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. எனவே, மக்கள் நம்பகமான வலைத்தளங்களில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
News October 27, 2025
ஈரோடு பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட அப்பகுதி மாமன்ற உறுப்பினர் தலைமையில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், மற்றும் பொதுமக்கள் அந்தந்த வார்டுக்களில் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது நிறை, குறைகளை தெரிவித்து பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 27, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

ஈரோடு பகுதி மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக ஆன்லைன் டேட்டிங் செயலிகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன. அதில் குற்றவாளிகள் போலி அடையாளங்களை உருவாக்கி, அறிமுகமில்லாதவர்களுடன் பேசி பணம் பறிக்கிறார்கள். இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்கவும், சந்தேகம் ஏற்படும்போது எச்சரிக்கையாக இருக்கவும், மாவட்ட காவல்துறை சார்பில் இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இலவச தொலைபேசி எண்ணை 1930 தொடர்பு கொள்ளலாம்.


