News August 15, 2024
புவனகிரி டிரைவரை கடத்தியவர் கைது

ராமநத்தத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகர்(40) சவாரிக்கு உளுந்தூர்பேட்டை சென்றார். இந்நிலையில் அவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர், கணவரை கடத்தியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை கடத்திய உளுந்தூர்பேட்டை அடுத்த ஷேக்உசேன் பேட்டையைச் சேர்ந்த நூர்கான் என்பவரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News December 26, 2025
கடலூர்: போதை பொருள் விற்ற 2 பேர் அதிரடி கைது!

கடலூர் மாவட்டம், முதுநகரில் போலீசார் கடந்த டிச.24-ம் தேதி நடத்திய சோதனையில், 21 கிலோ கஞ்சா, 130 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த தீபக் (25), சிவக்குமார் (24) உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தீபக் மற்றும் சிவக்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களது குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில் 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News December 26, 2025
கடலூர்: போட்டித் தேர்வுக்கு பயிற்றுநர்கள் தேர்வு

அண்ணாமலை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லூரிகளிலில் பல்வேறு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக சிறந்த பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே விருப்பமுள்ளவர்கள் சுயவிவரத்துடன் வருகிற 31.12.2025-க்குள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்யர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
கடலூர்: பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்

கடலூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). இவர் 17 வயது சிறுமி ஒருவரை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்ற நிலையில், அவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், கடலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் மோகன்ராஜை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


